Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை சீதை கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை: வைரல் புகைப்படம்!

Advertiesment
Annamalai
, ஞாயிறு, 1 மே 2022 (12:45 IST)
சமீபத்தில் இலங்கை சென்று உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
 
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு நேரில் சென்றுள்ள அண்ணாமலை, அங்கு உள்ள அரசு சாரா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரது இலங்கை பயணம் முடிந்தவுடன் இதுகுறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அளிக்க உள்ளார். 
 
இந்த நிலையில் இலங்கையில் உள்ள நுவரேலியா என்ற மாவட்டத்தில் சீதை அம்மன் கோவிலில் அண்ணாமலை தரிசனம் செய்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது..
 
 ராவணன் சீதையை சிறை பிடித்து வைத்திருந்த இடத்தில் தான் அந்நாட்டு மக்கள் சீதைக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!