Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலை, தமிழிசை எந்த தொகுதிகளில் போட்டி? பாஜக அறிவிப்பு

Advertiesment
annamalai

Sinoj

, வியாழன், 21 மார்ச் 2024 (18:22 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
 
இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
 
தமிழ் நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள்  கூட்டணியில் இணைந்துள்ள நிலையில்,தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
 
பாஜக ஆதரவாளரான ஓபிஎஸ் தேர்தலில் போட்டியா?இல்லையா என்ற தன் நிலைப்பாட்டை நாளை அறிவிக்கவுள்ளார்.
 
ஏற்கனவே பாஜகவின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், தமிழ் நாட்டு வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை.
 
இன்று 3 வது கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டு  பாஜக வேட்பாளர்கள் பெயர்  வெளியாகியுள்ளது.
webdunia

அதில், தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் வினோத் பி. செல்வம் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரியில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நீலகிரியில் எல் முருகனும், கோயம்புத்தூரியில் அண்ணாமலையும், பெரம்பலூரில்  பாரிவேந்தரும், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரியில்  பொன் ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர் ரவி.! பதவி விலக வேண்டும்..! செல்வப்பெருந்தகை...