Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக வாக்குறுதிகள் வெறும் காகிதம்..! அண்ணாமலை விமர்சனம்..!!

Advertiesment
annamalai

Senthil Velan

, புதன், 20 மார்ச் 2024 (13:20 IST)
திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்றும் இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்ட நிலையில், அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 
இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும்  கொடுத்திருக்கிறது திமுக என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்றும் இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!