தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் வெளியே வராமல் வாக்கு சேகரிப்பது இதுவே முதல்முறை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாஜக தமிழகம் முழுவதும் தனியாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக மாநில தலைவரான அண்ணாமலை மாவட்டங்கள்தோறும் பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய அவர் “தமிழ்நாட்டில் தேர்தல் ஒன்றிற்கு முதல்வர் வெளியே வராமல் காணொலி மூலமாக வாக்கு கேட்பது இதுவே முதல்தடவை. திமுகவினர் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு ஒன்றிற்கு ரூ.15 என்ற அளவில் ஊழல் செய்துள்ளனர்” என பேசியுள்ளார்.