தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் சிகிச்சை மையங்களும் குறைக்கப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த மாதம் முதலாக புதிய வேரியண்டான ஒமிக்ரான் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்தது. தமிழகத்திலும் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்த நிலையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களும் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் படிப்படியாக குறைக்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.