தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் டேண்டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாராக என தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தொழிலாளர் பிரச்சனைக்காக கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாமலை தலைமையில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, நீலகிரி மாவட்டத்திலுள்ள டேண்டீ நிறுவனத்தை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்
டேண்டீ நிறுவனத்தை எப்படி லாபகரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தெரியும். அப்படி டேண்டீ நிறுவனத்தை லாபகரமாக மத்திய அரசு கொண்டு சென்றுவிட்டால் தமிழக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா என சவால் விடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்
மேலும் டேண்டீ போலவே தமிழக மின்சார துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் ஒரு லட்சம் கோடி கடனில் இருக்கும் இந்த மின்சாரத்துறையை தமிழக அரசு சரியாக நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்