Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட துறையை தேவையின்றி விமர்சிக்க வேண்டாம்! – பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (09:13 IST)
மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் திரைப்படங்களை தேவையின்றி விமர்சிக்க வேண்டாம் என பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் மாநாடு. டைம் லூப் கான்செப்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் தற்கொலையை எதிர்க்கும் நிலையில் இஸ்லாமிய இளைஞர் தற்கொலை செய்து கொள்வது போல காட்சிகள் வைத்திருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என பாஜகவை சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகி ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜகவினருக்கு அறிவுறுத்தியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “வரலாற்றுரீதியான படங்கள் தவறாக எடுக்கப்பட்டால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் சாதாரணமாக வெளியாகும் பொழுதுபோக்கு படங்களை விமர்சிப்பதும், தடை செய்ய கோருவதும் தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments