Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் களத்தில் நிற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
நானும் களத்தில் நிற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின்
, சனி, 27 நவம்பர் 2021 (22:46 IST)
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் உங்களுடன் முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதில், அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்! எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது! எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு !