Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.எஸ். பாரதி மீது அவதூறு வழக்கு.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

Annamalai

Mahendran

, புதன், 10 ஜூலை 2024 (11:59 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தான் ஆர்எஸ் பாரதி மீது அண்ணாமலை அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறியிருப்பதாவது
 
 
திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடை மறைக்கவும், திமுக பட்டத்து இளவரசர் மனதைக் குளிர வைக்கவும், அனைவரையும் அவதூறாகப் பேசி வரும், அறிவாலயத்தின் திரு. ஆர்.எஸ். பாரதி மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். 
 
திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பரப்பிய அவதூறுக்கு தகுந்த தண்டனையும் ரூபாய் ஒரு கோடி இழப்பீடும் கோரித் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் மூலம் கிடைக்கும் நிதி, கள்ளக்குறிச்சியில் போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைத்துப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலத்தில் விடப்படும் எம்.பி.பி.எஸ் இடங்கள்: நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி