Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

Mahendran
வியாழன், 9 ஜனவரி 2025 (16:38 IST)
நாம் தமிழர் கட்சியின் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், பெரியார் பேசாததை சீமான் பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், "பெரியார் பேசியதை தான் சீமான் பேசியுள்ளார் என்றும் அதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார் என்றும் சீமான் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான், "பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் சம்பந்தமில்லை. பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கையே இல்லை. வள்ளலாரை விட பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்து விட்டார்?" என்றும் பேசினார்.
 
இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அண்ணாமலை, "பெரியார் பேசியதாக சீமான் கூறியதை எந்த புத்தகத்தில் பெரியார் எழுதியுள்ளார் என்பதை ஆதாரத்துடன் வெளியிட தயார். சீமான் வீட்டுக்கு காவல்துறையினர் வந்தார்கள் என்றால், அந்த புத்தகத்தின் நகலையும் நான்  காண்பிக்கத் தயார். பெரியார் பேசியதை தற்போது பொதுவெளியில் கூற முடியாது. சீமான் பேசியது சரி என்று நான் கூறவில்லை. ஆனால் பெரியார் பேசியிருக்கிறாரா என்று கேட்டால், பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார்," என்று கூறியுள்ளார்.
 
சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments