Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயிடம் இன்ஜினும் இல்ல... பெட்ரோலே இல்ல!.. போட்டு தாக்கிய அண்ணாமலை!...

Advertiesment
annamalai
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்கினாரோ அப்போது முதலே திமுகவை மட்டுமே அதிகமாக விமர்சித்து வருகிறார். பாஜகவை தனது கொள்கை எதிரி என்று மட்டும் கூறினார். எனவே அதிமுக மற்றும் பாஜகவை பற்றி விஜய் பேசுவதில்லை என்ற விமர்சனம் இருந்தது.. அதேநேரம் சமீப காலமாக அதிமுக, பாஜகவையும் விஜய் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்..

சமீபத்தில் நடந்த தவெக மூன்றாவது தொடக்க விழா கூட்டத்தில் பேசிய விஜய் ‘தமிழகத்தில் மூன்று கூட்டணிதான்.. ஒன்று திமுக கூட்டணி, ஒன்று பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் மக்கள் சக்தியான தவெக என்று பேசினார்... மேலும் ஒரு டப்பா இன்ஜின், ஒரு டபுள் இன்ஜின் இங்க இருக்கிறது.. ஆனால், தவெகதான் டாப் இன்ஜின் என்றும் பேசியிருந்தார்...

இந்நிலையில், விஜய் பேசியது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ‘விஜயிடம் இன்ஜின் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.. குறைந்தபட்சம் எங்களிடம் இன்ஜின் இருக்கிறது.. ஒருவேளை 234 தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை நிறுத்தினால் இன்ஜின் இருக்கிறது.  

234 தொகுதிகளிலும் மக்கள் அந்த வேட்பாளர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதற்கு போடும் பெட்ரோல் இருக்கிறது.. மக்கள் ஓட்டு போட்டு நல்ல வாக்குகளை வாங்குகிறார்கள் என்றால் அந்த வண்டி ஓடுகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன்.. இப்படி இன்ஜின், பெட்ரோல் என எதுமே இல்லாமல் பாஜகவை டப்பா இன்ஜின் என்ற பேசியிருக்கிறார்’ என்று பொங்கியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய எதிரிகளை நான் இப்படித்தான் பார்க்கிறேன்!.. விஜய் பற்றி பேசிய ஸ்டாலின்!...