Publish Date: Sun, 28 May 2023 (16:04 IST)
Updated Date: Sun, 28 May 2023 (16:06 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அண்ணாமலை வெளியிட்ட DMK Files பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்து மேலும் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம். முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?
இதற்காவது பதில் வருமா?
Edited by Siva