Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல்'' - சீமான் அறிக்கை வெளியீடு

''ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல்''  - சீமான் அறிக்கை வெளியீடு
, திங்கள், 9 ஜனவரி 2023 (19:02 IST)
ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ் நாடு, திராவிட நாடு போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். இதற்கு ஆளும் கட்சி, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

அதில்.

‘’திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது
நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஐயா ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிஐசிஐ முன்னாள் தலைவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு