குஷ்பு கட்டாயம் பாஜகவிற்கு வர வேண்டும் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது குஷ்புவின் கணவர் சுந்தர்.சி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததாகவும் குஷ்பூ பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் பரவின. இது குறித்து குஷ்பு தற்போது காட்டமான பதிலை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜகவில் நான் இணையப்போகிறேன் என்ற வதந்திக்கு விளக்கம் கொடுத்து என் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும். இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பட்டத்து. அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார், குஷ்பு பாஜகவில் சேர்ந்தால் வரவேற்கிறேன். குஷ்பு மிகவும் தைரியமான பெண்மணி. அவரின் தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பை.
அதேபோல எந்த அரசியல் கருத்தாக இருந்தாலும் நல்ல புரிதலோடு பேசுபவர். அவர் எங்கள் கட்சிக்கு வந்தால் பிரதமர் மோடியின் சாதனைகளையும் பாஜக மக்களுக்கான அரசு என்பதயும் எடுத்து சொல்வார். குஷ்பு கட்டாயம் பாஜகவிற்கு வர வேண்டும் என அழைப்பும் விடுத்தார் அண்ணாமலை.