Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியார் சிலை அவமதிப்பு - பா.ஜ.க தலைவர் கூறியது என்ன?

பெரியார் சிலை அவமதிப்பு - பா.ஜ.க தலைவர் கூறியது என்ன?
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (14:58 IST)
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர். 
 
இது தொடர்பாக, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
பா.ஜ.க தலைவர் எல்.முருகன், " திருச்சியில் ஈ.வெ.ராவின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் புனிதமான காவியை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல." என்று கூறி உள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஈவெராவின் பிறந்தநாள் அன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இதுதான் நீங்கள் அவருக்கு காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
 
காவல்துறை விசாரித்து கொண்டிருக்கும் போதே உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுகவின் வன்மமான அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறி உள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாய சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் டிராக்டருக்கு தீ வைப்பு, தமிழக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் - விரிவான தகவல்கள்