தேர்தலில் அதிமுகவிடம் 65 தொகுதிகளை டிமேண்ட் செய்கிறதா பாஜக என அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கபட்டுள்ள நிலையில் இதனை ஏற்க பாஜக தயாராக இல்லை என தெரிகிறது.
இந்நிலையில் தேர்தல் குறித்து பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. தற்போது கொள்கை ரீதியாக உடன்பாடுகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழ்நிலையை பொறுத்தே கூட்டணியில் கட்சிகள் இணையும். அதுவரை எவ்வித குழப்பமும் இல்லை.
தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக உள்ளது என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்தார். ஆனால், 65 தொகுதிகளை பாஜக கேட்பதாக திரித்து பரப்பிவிட்டனர் என தொகுதிகள் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.