Publish Date: Tue, 29 Mar 2022 (14:38 IST)
Updated Date: Tue, 29 Mar 2022 (14:40 IST)
தமிழக அரசுக்கு 6 மணி நேரம் கெடு தருவதாகவும் அதற்குள் முடிந்தால் தன்னை கைது செய்யவும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தன்மீது 610 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்குத்தான் வொர்த் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தான் கூறிய குற்றச்சாட்டு பொய் என்றால் தன்னை கைது செய்யவும் என்றும் இன்று மாலை 6 மணி வரை இங்கேதான் இருப்பேன் என்றும் முடிந்தால் தொட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது