வைரமுத்து மீது பாடகி கூறிய புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அண்ணாமலை

Webdunia
புதன், 31 மே 2023 (13:14 IST)
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுப்பினார். அதேபோல் கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் கொடுத்த புகாருக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
பாஜக எம்பி மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக நேற்று பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக கூறி அதன் பின் அந்த முடிவை மாற்றிக் கொண்டனர்
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து கூறிய போது ’விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் கைது செய்தால் தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையே தொடர்வோம் என்று கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மல்யுத்த வீரர் வீராங்கனைக்கு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினார். 
 
மேலும் கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் கூறிய புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும் அவர் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்