Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணை குழு அமைத்த அண்ணாமலை

Advertiesment
பாஜக மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணை குழு அமைத்த அண்ணாமலை
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (15:35 IST)
பாஜக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைப்பு. 
 
தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்து வருபவர் கே.டி.ராகவன். சமீபத்தில் கே.டி.ராகவனின் பாலியல் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கே.டி.ராகவன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
 
என்னையும் என் கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்! என தெரிவித்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து இது குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைத்து, வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். 
 
பாஜகவில் பொறுப்பில் நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மணிலா செயலர் மலர்கொடி தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பிச்சி போனாலும் விட மாட்டீங்களா? உக்ரைன் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள்!