Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடி - மேலும் 30 ஆசிரியர்களுக்கு தொடர்பு

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (11:17 IST)
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் மேலும் 30 ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. 
 
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாடு அதிகாரியும்,  ஐ.டி.துறை பேராசிரியையுமான உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இதனையடுத்து உமா உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டில் ரூ.600 கோடி வரை பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. 
 
லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பல முக்கியத் தகவல்களை கேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டில் மேலும் 30 பேருக்கு சம்மந்தம் இருப்பதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்திவிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”நான் ஈ என் பேரு.. நான் குட்டிதான் பாரு” - இஸ்ரோ விண்கலத்தில் பயணம் செல்லும் ”பழ ஈக்கள்”!

பஞ்சாபில் தரையிறங்கிய 2வது அமெரிக்க விமானம்.. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திரும்பினர்..!

டெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்.. நெரிசலில் 18 பேர் பரிதாப பலி..!

வாட்ஸ்அப் செயலி வாயிலாக திருப்பதி தரிசன டிக்கெட்டுகள்.. ஆந்திர அரசின் அசத்தல் அறிவிப்பு..!

திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.. முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments