Webdunia - Bharat's app for daily news and videos

Install App

87 வயது மனைவியை எரித்துக் கொன்ற 91 வயது முதியவர்

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (10:58 IST)
கேரளாவின் திருச்சூரில் குடும்பச் சண்டையின் காரணமாக 91 வயது முதியவர் ஒருவர் தனது 87 வயது மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள வெள்ளிகுளங்கரா பகுதியை சேர்ந்தவர் செரியா குட்டி (91).  இவரது  மனைவி  கொச்சுதிரேசியா(87). இவர்களுக்கு 7 பிள்ளைகள் உள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். செரியாவும் அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.
 
சமீபத்தில் இவர்களுக்குள் வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செரியா தனது மனைவியைக் எரித்துக்கொன்று ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார்.
 
இதனையடுத்து அவர்களின் மகன், தனது தாய் காணவில்லை என போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் செரியா தான் கொலைகாரர் என தெரியவந்தது. போலீஸார் செரியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments