Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக கொடியில் இருப்பது அண்ணாவா? அமித்ஷாவின் தாத்தாவா? முரசொலி தலையங்கம்

அதிமுக கொடியில் இருப்பது அண்ணாவா? அமித்ஷாவின் தாத்தாவா? முரசொலி தலையங்கம்
, வெள்ளி, 7 ஜூன் 2019 (08:30 IST)
அதிமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக, அதிமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எந்த நேரத்திலும் இந்த கூட்டணி முடிவுக்கு வரும் என தெரிகிறது. துக்ளக் ஆசிரியரின் ஆவேசமான கருத்துக்கள் இதனை கிட்டத்தட்ட முடிவு செய்கிறது. இந்த நிலையில் பாஜகவின் துணை அமைப்பாக அதிமுக மாறிவிட்டதாக இன்றைய முரசொலியில் வறுத்தெடுக்கப்பட்டுள்ளது.
 
பாஜகவின் அடிமை அணியாக, துணை அமைப்பாக அதிமுக ஆகிவிட்டதாகவும், அதிமுகவுக்கு இருமொழி கொள்கையும் தெரியாது, மும்மொழி கொள்கையும் தெரியாது என்றும், அதிமுக கொடியில் இருப்பது அண்ணா அல்ல, அமித்ஷாவின் தாத்தா என்று கூட நமது அமைச்சர்கள் விளக்கம் கொடுப்பார்கள் என்றும், ஜெயலலிதாவையே மறந்துவிட்டவர்கள் தான் இந்த ஜென்மங்கள் என்றும் முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் புதிய கல்விக்கொள்கை குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கையில் அவ்வளவு அவசரமாக திருத்தம் செய்ய என்ன காரணம்? என்றும், இந்த திருத்தம் கஸ்தூரிரங்கன் ஒப்புதலுடன் தான் நடந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ள இந்த தலையங்கம், நினைத்தவுடன் திருத்தம் செய்வதற்கு அது கஸ்தூரி ரங்கன் அறிக்கையா? அல்லது பாஜகவின் அறிக்கையா? என்றும் குறிப்பிட்டுள்ளது
 
தமிழகத்திற்கு தமிழ் மொழி ஒன்று மட்டுமே போதும் என்று கூறியபோது, தமிழ் மட்டும் இருந்தால் இந்தி புகுந்துவிடும் எனவே ஆங்கிலத்தையும் சேர்த்து இருமொழி கொள்கையை வகுத்துக்கொள்வோம் என்று அன்றே காமராஜர் முடிவு செய்தார் என்றும், அந்த கொள்கைதான் இன்றும் தமிழக மக்கள் மனதில் பதிந்துள்ளது என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சிக்கவிழ்ப்பு இப்போதைக்கு வேண்டாம்: திமுக அதிர்ச்சி முடிவு