Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 16 ஜூன் 2025 (10:16 IST)
ஆந்திராவில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தமிழகத்திற்கு குடிநீர் கொண்டு வரும் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது சென்னை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர நீர்வளத் துறை திட்டமிட்டிருந்தது. 
 
இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மதிப்பிடப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் இத்திட்டத்திற்கான நிதியை மாநில அரசிடம் தமிழக நீர்வளத் துறை கோரியது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சென்னைக்கு கொண்டு வர முடியும் என்ற நிலை இருந்தது.
 
ஆனால், தற்போது நிதிநிலை சரியாக இல்லாததை காரணம் காட்டி, இந்த திட்டத்திற்கு தமிழக அரசு நிதி வழங்கவில்லை. மாநில அரசுக்கு ஏற்கனவே கடன் சுமை அதிகமாக இருப்பதால், உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளிடமிருந்தும் கடன் பெற முடியவில்லை. எனவே, குழாய் வழியாக கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை கைவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments