பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையே முரண்பாடுகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அன்புமணி நிர்வாக குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாமக நிறுவனரான ராமதாஸுக்கும், அவரது மகனும், கட்சி செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாக முரண்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன, இந்நிலையில் அன்புமணி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி ராமதாஸ் அறிக்கை விடுவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கி அன்புமணி அறிக்கை விடுவதுமாக அறிக்கை யுத்தம் தொடர் கதையாகியுள்ளது.
சமீபத்தில் பாமக எம்.எல்.ஏ அருளை கட்சியை விட்டு நீக்குவதாக அன்புமணி உத்தரவிட்டது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அன்புமணி கட்சி நிர்வாக குழுவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளதுடன், பாமகவின் புதிய நிர்வாக குழுவையும் அறிவித்துள்ளார். இதில் ஜிகே மணி, தீரன், சிவபிரகாசம், பரந்தாமன், முரளி சங்கர் என 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 8ம் தேதி ஓமந்தூரில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அன்புமணி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Edit by Prasanth