Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை நீக்க உங்களுக்கு அதிகாரமில்ல.. ராமதாஸ் அய்யா சொல்லட்டும்! - எம்.எல்.ஏ அருள் பதிலடி!

Advertiesment
MLA Arul

Prasanth K

, புதன், 2 ஜூலை 2025 (16:01 IST)

பாமக கட்சி நெறிமுறைகளை மீறி நடந்ததாக பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி கூறிய நிலையில் அதற்கு அருள் பதிலடியாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாக ஏற்பட்டுள்ள மோதல்களும், முரண்பாடுகளும் கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அன்புமணி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக ராமதாஸும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்கி அறிக்கை விடுவது என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இந்நிலையில் இன்று ராமதாஸ் ஆதரவாளரும், எம் எல் ஏவுமான அருளை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இது குறித்து பேசிய அருள் “அன்புமணி ராமதாஸ் அதிகாரம் இல்லாதவர். அவர் செயல் தலைவர் மட்டும்தான். என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது. ராமதாஸ் - அன்புமணி நேரில் சந்தித்து பேசி ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் கட்சியை காப்பாற்ற முடியும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்குப்பதிவு.. பாஜக கண்டனம்..!