Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரொனால்டோ மாதிரி பண்ண தைரியம் வேணும் - அன்புமணி பாராட்டு!

ரொனால்டோ மாதிரி பண்ண தைரியம் வேணும்  - அன்புமணி பாராட்டு!
, புதன், 16 ஜூன் 2021 (15:57 IST)
செய்தியாளர் சந்திப்பில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை அகற்றியதற்கு பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணி சார்பில் அணி கேப்டனாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கோகோ கோலா பாட்டில்களை தவிர்த்தது வைரலான நிலையில் கோகோ கோலாவின் சந்தை மதிப்பு சரிந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ள பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் “யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கோகோ கோலா பாட்டில்களை அகற்றி விட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று வலியுறுத்தி தண்ணீர் பாட்டிலை வைத்த நிகழ்வு யாரும் சொல்ல முடியாத சுற்றுச்சூழல், உடல் நலப் பாடம்.” என்று கூறியுள்ளார்.

மேலும் “கோகோ கோலோ ஆதரவுடன் நடந்த நிகழ்வில் இப்படிச் செய்ய தனித் துணிச்சலும், சமூக அக்கறையும் வேண்டும். இந்த நிகழ்வால் கோக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3,000 கோடி சரிந்திருக்கலாம். ஆனால், ரொனால்டோ சொன்ன பாடத்தின் மதிப்பு விலை மதிப்பற்றது.” என பாராட்டியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்புலன்ஸை திருடிச் சென்ற நபர்....என்ன செய்தார் தெரியுமா?