வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிப்பட்ட மற்றொரு சிங்கம் உயிரிழந்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் ஒரு சிங்கம் தொற்று பாதிப்பால் உயிரிழந்தது.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் மூன்று சிங்கங்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்று சிங்கங்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒரு சிங்கம் தற்போது உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை, புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.