தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்கவேண்டும் என ஹிஜாப் விவகாரம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம் தற்போது நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து கூறிய போது இது தொடர்பான தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்துவிட்டு கல்வி நிறுவனங்களில் கல்வி, மத நல்லிணக்கம் மட்டுமே கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
பெண்கள் கல்வி கற்பதற்கு கட்டுப்பாடுகளும் அடையாளங்களும் தடையாக இருந்தவை அகற்றப்பட வேண்டு மென்றும் இந்தியாவில் இஸ்லாமிய பெண்களுக்கு இப்போது தான் கல்வி வேலை வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி உள்ளன என்றும் எனவே தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்கவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.