Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அல்லு அர்ஜுன் சொன்ன நோ... அன்புமணி ஹேப்பி!!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:33 IST)
புகையிலை விளம்பரங்களில் நடிக்க அல்லு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். 

 
புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசைகாட்டப்பட்ட போதிலும், சமூகக்கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி பாராட்டியுள்ளார். 
 
அல்லு அர்ஜுனின் புஷ்பா: 
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது.
 
பான் விளம்பரம்: 
புஷ்பா படத்தின் மூலம் இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுனை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அப்படி சமீபத்தில் புகையிலை சம்மந்தபட்ட ஒரு நிறுவனம் அவரை அணுக, பல கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் சொல்லியும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன்.
 
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி பாராட்டு: 
புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசைகாட்டப்பட்ட போதிலும், சமூகக்கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 
 
புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக்கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது.
 
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப்பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்.
 
புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments