அன்புமணி ராமதாஸின் அக்கா மகன் முகுந்த் பரசுராமனை 2024ம் வருடம் நடந்த பாமக பொதுக்குழுவில் இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் நியமித்தார். ஆனால் மேடையிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. அப்போதிலிருந்தே அவருக்கும் அவரின் தந்தை ராமதாஸுக்கும் இடையே மோதல் துவங்கியது. அதிலிருந்து இப்போது வரை பாமக ராமதாஸும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து மோதி வருகிறார்கள். பாமக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
அன்புமணி மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்களை ராமதாஸ் கண்ணீர் மல்க கூறி வருகிறார். இந்நிலையில்தான் சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் மே 29ஆம் தேதி முடிந்து விட்டதால் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்னை கொல்ல வேண்டும் என்று ஒரு பையன் பதிவு போடுகிறான்.. அவனை அழைத்து அன்புமணி பதவி கொடுக்கிறார்.. அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை.. அப்படி வளர்த்திருந்தால் என்னை மார்பிலேயும், முதுகேலேயும் ஈட்டியால் குத்தியிருக்க மாட்டான் என கண்ணீர் மல்க பேசினார் ராமதாஸ்.அதே மேடையில் பேசிய ராமர் அன்புமணியின் அக்கா மகன் எனது மாமா அன்புமணி 2004ம் வருடம் கட்சியில் சேர்ந்தார்.. அதே வருடத்தில் அவருக்கு இளைஞர் அணி தலைவர். அதே வருடத்தில் ராஜ்யாபா எம்.பி, அவருடத்தில் மத்திய அமைச்சர்..
எவ்வளவு வேகமாக அவருக்கு பதவிகள் கிடைத்தது. ஒரே வருடத்தில் நீங்கள் மத்திய அமைச்சராகலாம்.. ஆனால் என் தம்பி முகுந்தன் பதவிக்கு வந்தால் உங்களுக்கு எரிகிறதா?.. உங்களுக்கு வந்தால் ரத்தம்.. மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?..
தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகானை அவரின் மகன் ஔரங்கசீப் 8 வருடங்கள் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்தான் தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டே இறந்து போனார் ஷாஜகான்.
இதை நான் ஏன் சொல்கிறேன் எனில் பதவி கண்ணை மறைத்தால் பெற்ற தகப்பன் கூட எதிரியாக தெரிவான். ஐயாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.. அவர் எனக்கு தாத்தா மட்டுமல்ல.. அவர் என்னுடைய ஹீரோ.. இந்தியாவில் பல பலரும் எம்.எல்.ஏ ஆகவேண்டும், மத்திய அமைச்சராக வேண்டும் என்கிற ஆசையில் கட்சி துவங்கினார்கள். ஆனால் உலகத்திலேயே கட்சி துவங்கி இதுவரை எந்த பதவிக்கும் வராதவர் ஐயா மட்டும்தான். தொண்டர்களை எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தார். மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கி கொடுத்தார்.
ஐயா நீங்கள் 50 வருடம் உழைத்துவிட்டீர்கள்.. இனிமேல் நாங்கள் இருக்கிறோம்.. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் ஹீரோ? யார் ஜீரோ? என தெரிய வரும் என்று ஆவேசமாக பேசினார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Image Courtesy to Sun News