Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராட்டுகிறேன், ஆனால் இதையும் செய்வாரா சைலேந்திரபாபு? அன்புமணி கேள்வி..!

Advertiesment
அன்புமணி
, புதன், 31 மே 2023 (10:24 IST)
இரட்டை கொலை  துப்புதுலக்கிய காவல்துறையினரை  சைலேந்திரபாபு பாராட்டிய செயலை நானும் பாராட்டுகிறேன். ஆனால் அதே நேரத்தில் வேங்கைவயல் பிரச்சனைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் சைலேந்திரபாபு நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே  நடந்த இரட்டைக் கொலை  வழக்கில்  துப்புதுலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார். 
 
இது மிகவும் சரியான செயல். ஊக்குவிப்பு தான் காவல்துறையினருக்கு உத்வேகம் அளிக்கும்.  நானும் பாராட்டுகிறேன். அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து இன்றுடன் 5 மாதங்கள் 6 நாட்களாகிவிட்டது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா?
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!