Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (19:56 IST)
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவலை இன்று பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கல்லூரியில் சேருவதற்காக மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவை என்பதால் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது சிறப்பு குழுவினரால் செய்யப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்
 
மேலும் தமிழகத்தில் மருத்துவ நிபுணர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments