1 முதல் 9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டிய விடுமுறை! – அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Webdunia
புதன், 4 மே 2022 (13:07 IST)
வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக பல மாநிலங்களிலும் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் மற்றும் முன்கூட்டிய விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நாட்கள் தவிர மீத நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments