Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்திவரதர் கோவிலுக்கு செல்ல மறுப்பு: தீக்குளித்த ஆட்டோ டிரைவர்

Advertiesment
அத்திவரதர் கோவிலுக்கு செல்ல மறுப்பு: தீக்குளித்த ஆட்டோ டிரைவர்
, புதன், 3 ஜூலை 2019 (15:37 IST)
40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்துக்கு தன்னை அனுமதிக்காததால் விரக்தியடைந்த ஆட்டோ ஓட்டுநர் கோவிலுக்கு முன்னாலேயே தீக்குளித்தார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார். தற்போது 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் நடைபெற்றுவருகிறது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்தபடி இருக்கின்றனர். குமார் அவர்களை தனது ஷேர் ஆட்டோவில் அழைத்துவந்து அத்திவரதர் கோவிலில் விட்டுள்ளார். இதற்கான உள்ளூர் ஆட்டோ ஓட்டுநருக்கான அனுமதி சீட்டையும் அவர் வைத்திருந்திருக்கிறார். ஆனாலும் பாதுகாப்பு போலீஸார் அத்திவரதர் வைபவம் நடக்கும் இடத்தில் பயணிகளை சென்று விடவும், அழைத்து வரவும் அவரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

அவர் எவ்வளவு கேட்டும் அவர்கள் அவரை உள்ளே விடவில்லை. இதனால் விரக்தியடைந்த குமார் அத்திவரதர் கோவிலுக்கு அருகிலேயே தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சுதாரித்து அவரை காப்பாற்றுவதற்குள் அவர் முழுவதுமாக எரிந்துவிட்டார்.

அவரை உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தரிசனத்துக்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமதிக்காமல் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் - ராகுல் காந்தி பிடிவாதம்