தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் வைத்திருந்த கொடியை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்த நிலையில் அவர் தற்போது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  செஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது முதலமைச்சர் புகைப்படத்தை அகற்றி பிரதமர்  படத்தை ஒட்டியது தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்  
 
									
										
			        							
								
																	கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஜாமீனில் வெளி வருவது கஷ்டம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டியின் கைது நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.