Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி கோடிகளில் சம்பாதிக்க ஒரு வாரம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி. -பாஜக பிரமுகர் டுவீட்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:33 IST)
உதயநிதி கோடிகளில் சம்பாதிக்க ஒரு வாரம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக பிரமுகர் டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில், வரும் தீபாவளி பண்டிகையொட்டி கடந்த இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வரும் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி , இரவு 7 முதல் 9 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

இதைக் குறிப்பிட்டி பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், உதய நிதி கோடிகளில் சம்பாதிக்க ஒரு வாரம் திரையரங்குகளில் சிறப்பு காட்சி அனுமதி, இந்துக்கள் சந்தோஷமாக பண்டிகை கொண்டாட 2 மணி நேரம் மட்டுமே அனுமதி ! மக்கள் பதில் கூறும் காலம் கண்டிப்பாக வரும் எனப் பதிவிட்டுள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கார்த்தியின் சர்தார் பட வி நியோக உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments