Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

Siva
ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (14:26 IST)
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தான் திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகிற கூட்டணி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தளத்தில் அவர் மேலும் கூறியதாவது:
 
நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!
 
ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!
 
ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முக ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!
 
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!
 
முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!
 
இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்!
 
பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே! 
 
இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது! 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

அடுத்த கட்டுரையில்
Show comments