Publish Date: Thu, 11 Nov 2021 (11:01 IST)
Updated Date: Thu, 11 Nov 2021 (11:05 IST)
சென்னையில் மழை காரணமாக விமானங்கள் தாமதமான நிலையில் தற்போது சரியான அட்டவணைப்படி இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையம் வரும் விமானங்கள் மற்றும் புறப்படும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது சரியான அட்டவணைப்படி அனைத்து விமானங்களும் இயக்கப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.