Publish Date: Thu, 11 Nov 2021 (09:58 IST)
Updated Date: Thu, 11 Nov 2021 (10:21 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை!
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு சுரங்கப் பாதைகள் மற்றும் சாலைகளில் மழைநீர் கடல் போல் தேங்கியுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக எண்ணூரில் 17 சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 14 சென்டி மீட்டர் மழையும், வில்லிவாக்கத்தில் 12 சென்டி மீட்டர் மழையும், சென்னை தாம்பரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது நான்கு புறமும் காற்று பலமாக வீசுகிறது எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்