Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கிகள் இரவு 8 மணி வரை இயங்கும் : அதிகாரிகள் தகவல்

Advertiesment
வங்கிகள் இரவு 8 மணி வரை இயங்கும் : அதிகாரிகள் தகவல்
, புதன், 28 மார்ச் 2018 (11:40 IST)
அகில இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு வரும் சனிக்கிழமை இரவு 8 மணி வரை  அனைத்து வங்கிகளும்  இயங்கும் என தெரிவித்துள்ளது.
 
மார்ச் 29 மஹாவீர் ஜெயந்தி மற்றும் மார்ச் 30-ம் தேதி புனித வௌ்ளி ஆகியவைகளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. ஏப்.1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஏப்ரல் 2ஆம்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது. 
 
எனவே இடையில் மார்ச் 31ஆம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை என வதந்திகள் பரவின. இதனால் மொத்தம் 5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என கூறப்பட்டு வந்தது.
webdunia
 
இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தலைவர் வெளியிட்ட தகவலில்,
 
வரும் வியாழக்கிழமை (29) மற்றும் வெள்ளிக்கிழமை (30) மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை, சனிக்கிழமை (31) அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும். அதேபோல் ஏப்ரல் 2-ஆம் தேதியும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் நலக் குறைவால் இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி