Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகிரி மனைவி கொடுத்த பலே ஐடியா : ஆடிப்போன கருணாநிதி குடும்பம்

அழகிரி மனைவி கொடுத்த பலே ஐடியா : ஆடிப்போன கருணாநிதி குடும்பம்
, திங்கள், 10 செப்டம்பர் 2018 (16:11 IST)
அரசியலில் அழகிரி மீண்டும் பழைய இடத்தை பிடிக்க அவரின் குடும்பத்தினர் கொடுத்துள்ள சில ஐடியாக்கள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என அழகிரி தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு, தனது பலத்தை நிரூபிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் கடந்த 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் பகுதியிலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதி வரை பேரணி நடத்தினார். 
 
அதேபோல், தன்னை இணைத்துக்கொள்ளாவிட்டால் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இடைத்தேர்தலில் திமுக தொடர் தோல்விகளை சந்திக்கும் என தொடர்ந்து பேட்டிகளில் கூறி வருகிறார். அதேபோல், ஸ்டாலினின் தலைமையையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.  இது ஸ்டாலின் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார். மேலும், அழகிரியை இணைத்துக்கொள்வது பற்றி அவர் கருத்து கூட தெரிவிப்பதில்லை.
 
ஸ்டாலினின் அமைதி அழகிரி குடும்பத்தினரை அப்செட் ஆகியுள்ளதாம். எனவே, கோபமடைந்த அழகிரியின் மனைவி காந்தி, நீங்கள் மாமா (கருணாநிதி) தொடர்ச்சியாக நின்று வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் சுயேட்சையாக நில்லுங்கள். நாம் அனைவரும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். 
 
பல வருடங்களாய் காணாமல் போயிருந்து, திடீரென அரசியலுக்கு வந்த தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று புரட்சி செய்தார். அப்படி இருக்க இருக்க உங்களால் ஏன் வெற்றி பெற முடியாது. மாமா இறந்ததால் ஏற்பட்ட அனுதாபத்தில் திருவாரூர் தொகுதி மக்கள் நிச்சயம் உங்களுக்கு வாக்களிப்பார்கள் எனக்கூறினாராம்.
 
இதைக் கேள்விப்பட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரக்தியில் பெண் போலீஸ் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை