Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியை காப்பாற்ற வேண்டும்: துடிக்கும் அழகிரி; கண்டுக்கொள்ளாத ஸ்டாலின்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (20:28 IST)
அழகிரி செப்டம்பர் 5 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஒரு பேரணியை நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். இடைத்தேர்தலின் போது நிச்சயம் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வோம் என தெரிவித்துள்ளார்.
 
திமுகவின் பொதுக்கூழு கூட்டம் நாளை கூடுகிறது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை எதிர்த்து இதுவரை யாரும் திமுகவில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 
 
எனவே, தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் நாளை போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர் என தெரிகிறது. இந்நிலையில், அழகிரி, ஸ்டாலினை எதிர்த்து பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். 
 
கடந்த சில தினங்களாக மதுரையில் தனது ஆதரவாளா்களை ஆலோசனை நடத்தி வரும் அவர், தலைவா் கருணாநிதி இருந்த போது என்னை கட்சியில் இணைப்பதை சிலா் தடுத்து விட்டனா். 
 
கருணாநிதி இருந்த வரை நான அமைதியாக இருந்துவிட்டேன். தற்போது கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்ற போது கலைஞர் உயிருடன் இருந்தார். அதனால் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்களை கட்சியில் சோ்க்காவிட்டால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

10 நாட்களாக பெரிய அளவில் ஏற்ற இறக்கமில்லாத தங்கம் விலை.. இனிமேல் என்ன ஆகும்?

சாலை போடவில்லை என கூறிய நபரை ‘போடா’ என கூறிய திமுக எம்.எல்.ஏ.. பெரும் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments