Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக், டுவிட்டர், இமெயிலுக்கும் ஆதார் எண்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (20:05 IST)
இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றான ஆதார் எண்ணை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களில் கணக்கை தொடங்கவும், இமெயில் கணக்கை தொடங்கவும் ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. போலி சமூக வலைத்தள கணக்குகளை இதன்மூலம் தடுக்க முடியும் என்பதே இதன் நோக்கமாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளில் ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது
 
இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் ஆதார் எண்களை சமூக வலைத்தளங்களில் இணைப்பதற்கு பதிலாகவும், இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய விதிகள் வகுக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடினார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments