Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவால் ஆகிறதா ஏர்செல் நிறுவனம்? கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (09:35 IST)
நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஏர்செல் நிறுவனம் தற்போது மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது
 
கடந்த ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏர்செல் தனது சேவையை நிறுத்தி கொண்டது.
 
மேலும் தனது நிறுவனம் திவால் நிறுவனமாக அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி ஏர்செல் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் தனது ஊழியர்கள் அனைவருக்கும் இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த இமெயில் நிறுவனத்தின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த நிலையில் ஏர்செல் சேவை திடீரென தமிழகத்திலும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது
 
இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகவும், இதன் காரணமாக விரைவில் திவால் நிறுவனமான அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் ஏர்செல் நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியில் தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்: ஆர்.எஸ்.பாரதி

மத்திய அரசை தாக்கி பேசுவது மட்டும் தான் அரசின் நடவடிக்கையா? சரத்குமார்

மத்திய அரசின் பிரச்சார் பாரதியின் புதிய ஓடிடி: 40 சேனல்களை காணலாம்..!

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments