Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 16 April 2025
webdunia

விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ சேவை தொடக்க தேதி, கட்டண விபரம் அறிவிப்பு

Advertiesment
மெட்ரோ ரயில்
, வியாழன், 7 பிப்ரவரி 2019 (21:44 IST)
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் தற்போது ஒருசில பகுதிகளில் இயங்கி வருவதால் சாலை போக்குவரத்தில் டிராபிக் பெருமளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து, சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, வரும் 10ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பயணம் செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான கட்டண விபரம் குறித்த அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளது.  அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆக இருக்கும் என்றும், இந்த கட்டண உயர்வு டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ சேவையை துவக்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிந்தால் நோட்டாவை ஜெயிச்சு காட்டட்டும்! கமலுக்கு சவால் விடுத்த ஜெயகுமார்