Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் ஒரே நாளில் அதிகரித்த காற்ற மாசு குறியீடு!

Advertiesment
சென்னையில் ஒரே நாளில் அதிகரித்த காற்ற மாசு குறியீடு!
, ஞாயிறு, 15 நவம்பர் 2020 (09:37 IST)
தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
 
காற்று மாசு தற்போதைய சூழ்நிலையில் கடும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக டெல்லியில் தற்போதைய குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவாக காற்று மாசு கடுமையான நிலையை எட்டியுள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில் தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆம், காலையில் 100 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு மாலையில் 159 ஆக அதிகரித்துள்ளது. 
 
இந்த எண்ணிக்கையானது நாள் ஒன்றுக்கு 4 சிகரெட்டுகளை புகைத்தால் நுரையீரல் பாதிப்புக்கு சமம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தூத்துக்குடி, கடலுர், மதுரை, ஓசூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் சந்திக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் மாசு அளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பற்றி எறியும் மதுரை: மீண்டும் ஒரு ஜவுளி கடை தீ விபத்து!