கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதன் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வந்தோம்
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு காரணமாக நேற்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் இரவில் மழை கொட்டியது. பகலில் பொதுமக்களின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இடையூறின்றி மழை பெய்யாமல் இருந்த நிலையில் அதற்கு பதிலாக இரவில் கனமழை கொட்டியதால், சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடைக்கின்றது
குறிப்பாக சென்னை கிண்டி மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் நீர் தேங்கி இருக்கிறது. அதேபோல் சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்தது
சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது