Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக ஏன் சூழ்ச்சி செய்கிறது - ஸ்டாலின் விளக்கம்

Advertiesment
அதிமுக ஏன் சூழ்ச்சி  செய்கிறது - ஸ்டாலின் விளக்கம்
, வெள்ளி, 3 மே 2019 (14:29 IST)
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தென்பரங்குன்றம் கூத்தியார்குண்டு நேதாஜி நகரில் இடைத்தேர்தலுக்கான திண்ணை பிரசாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அப்போது அவர் கூறியதாவது :
 
வரும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றார். பெரும்பான்மை இல்லாததால்தான் அதிமுக அரசானது தற்போது மூன்று எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மூலமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுபியுள்ளதாகவும்  குற்றம்சாட்டினார்.
webdunia
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி மைனாரிட்டி ஆட்சி நடத்திக்கொண்டுள்ளார்.மெஜாரிட்டி இல்லை.மொத்தம் 224 எம்.ஏக்களுக்கு பாதிக்குப்பாதி இருந்தால்தான் ஆட்சியில் இருக்க முடியும்.ஆனால் இன்று அதிமுகவில் அந்த எண்ணிக்கை இல்லை. தற்போதி திமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 97 எம்.எல்.ஏக்கள் உள்ளோம். எனவே 18 முன்ன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் 18, தற்போது நடைபெறவுள்ள  4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் 119 எம்.எல்.ஏக்கள் ஆக திமுக பெற்றுவிடும். 
 
ஆனால் இதைத் தெரிந்துகொண்டுதான் அதிமுக ஆட்சி 3 எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைக்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதனால்தான் சபாநாயகர் மீது நாங்கள்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் 3 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகாது என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு !