Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

karur
, வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:42 IST)
மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
மின் கட்டண உயர்வு செய்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 
அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், மின் கட்டணத்தில் பிக்ஸட் அமொண்ட் என ஒரு தொகை இருக்கிறது. அது எவ்வளவு தொகை என்று சொல்லவில்லை. இன்று உள்ள மின் கட்டணம் 2, 3 மடங்கு உயர உள்ளது. கொரனோவிற்கு பிறகு நிலைமை இன்னுன் சரியாக இல்லை. இந்நிலையில் மின் கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமை ஏற்றி இருக்கிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதால் 6000 கோடி ரூபாய் வரை ஊழல் நடத்த திட்டமிட்டுள்ளனர். நல்ல முதல்வராக இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பின் அடிப்படையில் மின்சாரத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இருக்க வேண்டும்.நீதிமன்றம் சரியாக விசாரித்தால் நம்ம ஊர் அமைச்சர் ஜெயிலுக்கு போவது உறுதி. வரிகளை உயர்த்தி மக்கள் மீது சுமை ஏற்றிய அரசு இந்த அரசு. 28 முறை மத்திய அரசு கொடுத்ததன் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தியுள்ளோம் என்பது எல்லாம் பொய். முன்னாள் அமைச்சர் வீடுகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே சோதனைக்கு வந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். தவறு செய்யாதவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி நிரபராதி என நிரூபிக்க வேண்டும். அதிமுக அமைச்சர் மீது வழக்கு தொடருவேன் என சொன்னீர்கள் வழக்கு தொடர வேண்டியது தானே.
 
தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. விலைவாசி விண்ணை முட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. கடந்த 31 நாளில் 130 கொலைகள் நடந்துள்ளது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. திமுகவினர் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்.
 
அதிமுக ஆட்சியில் லாக் அப் மரணம் 2 நடந்தது. அப்போது குரல் கொடுத்தவர்கள் இப்போது எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. 24 மணி நேரம் மது விற்பனை செய்யப்படுகிறது. 10 மணிக்கு மேல் பில் இல்லாமல் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்றனர் திமுகவினர். அவற்றை செய்தார்களா இன்று. முதல்வரும் பாணியில் வெட்கம், மானம், சூடு சொரணை இருந்தால் இந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்து இருக்க வேண்டும்.
 
8 வழிச் சாலையை எதிர்த்த திமுக தற்போது காசுக்காக 8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை என்கிறார் அமைச்சர்.
 
இன்று தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். நீட் தேர்வில் 19 மாணவ, மாணவிகள் உயிரிழந்து இருக்கிறார்கள் யாரும் வாய் பேச மாட்டேங்கறார்கள். திமுக ஆட்சிக்கு வர ஊடகங்கள், அரசு ஊழியர்கள் தான் காரணம். ஆனால், இன்று அவர்களே ஏமாந்து போய் இருக்கிறார்கள். ஏற்கனவே 13 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அப்பொழுது நாங்களும் தேர்தல் வாக்குறுதி கொடுப்போம். அதிமுகவை உடைக்க வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ் வைத்து அரசியல் செய்தார்கள். வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஒரு எம்.எல்.ஏவை மட்டும் கூட்டிட்டு போயிட்டார்கள். அவரும் வந்து விடுவதாக புலம்பிக் கொண்டு இருக்கிறார். குடும்ப ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. மருமகன், மனைவி, மகன் தான் ஆட்சி நடத்துகிறார்கள். அதற்கு அமைச்சர்கள் உடந்தையாக இருக்கிறார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலும் வரும் அனைவரும் அதிமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலைச் சிற்றுண்டியை மாணவர்களுக்கு வழங்க தாமதம் .....தலைமையாசிரியை சஸ்பெண்ட்!