Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேல்முறையீடு செய்த ஓபிஸ்; உஷாராய் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!

மேல்முறையீடு செய்த ஓபிஸ்; உஷாராய் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!
, சனி, 6 ஆகஸ்ட் 2022 (09:22 IST)
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.


அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அலுவலகத்தை திறக்க அனுமதி கோரி ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் சாவியை பெற்று அதிமுக தலைமை அலுவலகத்தை திறந்தனர். 

ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி வரை அதிமுக தலைமை கழகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் மீண்டும் அங்கு சென்று கட்சி பணிகளை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதன் மீதான விசாரணை வரும் போது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தமது தரப்பையும் கேட்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக் கடலில் காற்றழுத்தம்? தமிழகம் & கேரளத்தில் மழை நீடிக்கும்!